பல்லவி
ஏசு கீரிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர்
1
மாசில்லா மெய்யரட்சகர்
மானிட ரூபுடையார்;
யேசு கீரிஸ்துவென்ற
இனிய நாமமுடையார்.
— ஏசு
2
வம்பு நிறைந்த இந்த
மானிட ஜாதிகள் மேல்;
அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்.
— ஏசு
3
பாவத்திலே கோபம் வைப்பார்,
பாவிமேல் கோபம் வையார்;
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்.
— ஏசு
4
தன்னுயிர் தன்னைவிட்டுச்
சருவ லோகத்திலுள்ள ;
மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர்.
— ஏசு
5
அந்தரவானத்திலும்,
அகிலாண்ட கோடியிலும்;
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர்.
— ஏசு