அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 160

ஏசு என்றதுமே எனக்கோர்

ஏசு என்றதுமே எனக்கோர்

இன்பம் பிறக்குதம்மா

காசினியில் அவர்போல் எவரையும்

கண்டதில்லையம்மா.....

1

பேசத் தொடங்கினாலோ பேச்செல்லாம்

பேரின்பம் சொட்டுதம்மா

பார்க்கத் தொடங்கினாலோ பார்வை எல்லாம்

பாவியென் மேலையம்மா...

2

குஷ்ட ரோகியவனைக் கையினால்

கூசாமல் தொட்டாரம்மா

கஷ்டப்படுவோரைக் கண்டதும்

கண்ணீர் வடித்தாரம்மா.....

3

சிலுவை மீதினிலே இரத்தத்தைச்

சிந்தி மரித்தாரம்மா

உலகை மீட்டிடவே ஆண்டவர்

அன்புடன் மாண்டாரம்மா....

4

வழி சத்ய ஜீவனே - எம்மை

விழிப்பாய்க் காப்பவனே

உள்ளங்கையி லெம்மைப் பள்ளமாய்ப் பதித்தோனே

நல்ல வல்ல மேய்ப்பனே.

— சுந்தர

5

அதிசயமானவரே - நல்ல

ஆலோசனைக் கர்த்தரே

வல்லமை தேவனே நித்திய பிதாவே

சமாதான பிரபுவே.

— சுந்தர

6

அல்லேலூயா பாடவே - மகா

வல்லாவியைத் தரவே

எல்லாரையுந் தீர்க்க இந்நிலம்வரவே

நில்லா திருப்பவரே.

— சுந்தர

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு