பல்லவி
ஏசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்.
1
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது.
— ஏசு
2
வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீருள்ள திருநாமமது
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே.
— ஏசு
3
பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது.
— ஏசு
4
உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது.
— ஏசு
5
சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடை முற்றும் அகற்றிடும் நாமமது.
— ஏசு