பல்லவி
என்னை மறவா இயேசுநாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்.
1
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் சந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே.
— என்னை
2
பயப்படாதே வலங்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
ஏழை என்னை நின் கையினின்று
எவரும் பறிக்க இயலாதே.
— என்னை
3
தாய் தன் சேயை மறந்துவிட்டாலும்
உன்னை மறவேன் என்றதாலே ஸ்தோத்திரம்
உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
உன்னதா எந்தன் புகலிடமே.
— என்னை
4
உன்னைத் தொடுவோன்; என் கண்மணியை
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னை காத்திடுமே
— என்னை
5
உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுதே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக்கொடியே.
— என்னை
6
என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியாயினும் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே.
— என்னை