பல்லவி
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே.
1
பொன்னோனா தொலைந்திடும், மண்ணோனா அழிந்திடும்,
பூவோ ரொழிந்திடுவார் கணமே;
என்னாசைமிகும் யேசுவோ நித்தியர்,
எல்லாப் பொருள்விலை கொள்ளாப் பொருளெனும்,
— என்
2
என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ;
விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்,
மித்திரனே, சுகபத்திரமருளும்.
— என்
3
பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர் ;
சாபமே தீர்த்தோர் சற்குரு நாதன்,
சஞ்சல மினியேன்? நெஞ்சமே மகிழாய்.
— என்
4
ஆசி செய்திடுவார், அருள் மிக அளிப்பார்,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;
மோசமே மறைப்பார்; முன்னமே நடப்பார்,
நித்ய வழி சத்யம் வாசல் உயிரெனும்.
— என்
5
கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்;
கடைசி மட்டுங் கைவிடாதிருப்பார்;
பாவ மன்னிப்பளிப்பார், பாக்கியங்கொடுப்பார்,
பரம பதவியினுள் எந்தனை எடுப்பார்.
— என்
6
போனது போகட்டும், புவிவசை பேசட்டும்,
பொல்லான் அம்புக ளெய்திட்டும்;
ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும்,
அன்புமிகும் பேரின்ப மெனக்கருள்.
— என்