அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 155

எல்லாம் யேசுவே, எனக்கெல்லாம் யேசுவே

பல்லவி

எல்லாம் யேசுவே, - எனக்கெல்லாம் யேசுவே

தொல்லை மிகு மிவ்வுலகில் - துணண இயேசுவே.

1

ஆயனும் சகாயனும் நேயனு முபாயனும்,

நாயனு மெனக்கன்பான ஞான மணவாளனும்.

— எல்லாம்

2

தந்தைதா யினம் ஜனம் பந்துளோர் சிநேகிதர்,

சந்தோட சகலயோக சம்பூரண பாக்கியமும்.

— எல்லாம்

3

கவலையி லாறுதலும் கங்குலிலென் ஜோதியும்,

கஷ்ட நோய்ப் படுக்கையிலே கைகண்ட ஔஷதமும்

— எல்லாம்

4

போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்,

ஆதரவு செய்திடுங் கட்டாளியுமென் தோழனும்.

— எல்லாம்

5

அணியு மாபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்,

பிணையாளியும் மீட்பருமென் பிரியமத்தியஸ்தனும்.

— எல்லாம்

6

ஆனஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்

ஞானகீதமும் சதுரும் நாட்டுமும் கொண்டாட்டுமும்.

— எல்லாம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு