அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 154

எந்தன் உள்ளம் புது

எந்தன் உள்ளம் புதுகவியாலே பொங்க

இயேசுவைப் பாடிடுவேன்

அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்

அவரையே நேசிக்கிறேன்.

பல்லவி

அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்

அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்

இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய

கர்த்தரைக் கொண்டாடுவேன்.

1

சென்ற காலம் முழுவதும் காத்தரே ஓர்

சேதமும் அணுகாமல்

சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கின்னும்

சுக பெலன் அளித்தாரே.

— அல்லேலூயா

2

பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்

தஞ்சமே ஆனாரே

அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்

அடைக்கலம் அளித்தாரே.

— அல்லேலூயா

3

சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை

சிறுவழிகர் மறைத்தாரே

கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்

கிருபையும் பொழிந்தாரே.

— அல்லேலூயா

4

களிப்போடு விரைந்தெம்மைச் சேர்ந்திட என்

கர்த்தரே வருவாரே

ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி

அனுதினம் காத்திருப்போம்.

— அல்லேலூ

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு