அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 153

எந்தன் ஆத்ம நேசர்

பல்லவி

எந்தன் ஆத்ம நேசர் எங்கே.

அனுபல்லவி

அவர் எங்கே - அவர்ளங்கே

அவர் எங்கே, எங்கே, எங்கே, எங்கே, எங்கே

— எந்தன்

1

நகரத்தின் தெருவீதி சென்று

நான் நலமுடன் தேடினேன் நின்று

ஜெயா தேடியுங் காணாமல் இன்று

முகம் வாடி மங்குகிறேன் நின்று.

— எந்தன்

2

காட்டு மரங்களில் தானும்

நல்ல கிச்சிலி மரம் போல தோணும்

நல்ல குமரருக்குள்ளே இவர் தானும்

குடியிருப்பது போலவே தோணும்.

— எந்தன்

3

பதினாயிரம் பேரில் சிறந்தோர்

அதிவெண்மை சிவப்பு நிறமானோர்

தலை பொன்மயமாய் விளங்கிடுமே

மயிர் சுருள் சுருளாயிருப்பவரே.

— எந்தன்

4

லீபனோன் போலவர் ரூபம்

மிக மதுரமவர் வாயின் வசனம்

லீலி புஷ்பங்கள் போன்ற அவருதட்டில்

நின்று வாசனை வெள்ளைப் போலாம் வடியும்.

— எந்தன்

5

இடது கை என் தலைகீழ் வைத்து

அவர் வலது கையாலரவணைத்து

என்னை மனதாய் அணைத்துக் கொள்ளுவதாலே

நான் சோகமடைவேன் நேசத்தாலே.

— எந்தன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு