உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் ஏசுநாதருக்கு வான்முடி சூட்டுங்கள்
பல்லவி
ராஜாதி ராஜனேசு யேசு மகாராஜன் அவர் ராஜ்ஜியம்
புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க, அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயாவே, அல்லா ஓமோகாவுக்கே அல்லேலூயாவே.
1
நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
மேலோ ஏசுநாதருக்கு மெய்முடி சூட்டுங்கள்
2
நல்மனதோடு சொல்கிறேன் நாட்டார்களே நீங்கள்
புன்னகை கொண்டு நிற்பானேன் பூமுடி சூட்டுங்கள்.
3
இந்தியா தேசத்தார்களே ஏகமாய்க் கூடுங்கள்
பூந்தானங்கள் அற்பமென்றே பொன்முடி சூட்டுங்கள்.
4
யேசுவென்ற நாமத்திற்கு எல்லாரும் பாடுங்கள்
ராஜரேயவர் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்.