எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
ஏசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்.
1
ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே
— எந்தக்
2
தாய் தந்தை நீரே - தாதியும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே
— எந்தக்
3
வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே
— எந்தக்
4
வானிலும் நீரே - பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே
— எந்தக்
5
துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் - என் நேசரும் நீரே
— எந்தக்
6
ஞான வைத்தியராம் - ஔஷதம் நீரே
ஆத்ம நேசராம் - என் நண்பரும் நீரே
— எந்தக்
7
ஞானமும் நீரே - தானமும் நீரே
நியாயமும் நீரே - என் நாதனும் நீரே
— எந்தக்
8
ஆறுதல் நீரே - ஆதாயம் நீரே
ஆசையும் நீரே - என் ஆனந்தம் நீரே
— எந்தக்
9
மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே
— எந்தக்
10
தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே
— எந்தக்