உம்மைப்போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா
இந்தப் பார்தலத்தில்
உம்மைப் போல் யாருண்டு?
பாவப் பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர்.
1
உலகம், மாமிசம், பிசாசுக்கடியில்
அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம் போல் நடந்தேன், ஏமாற்றம் அடைந்தேன்
2
என்னையா தேடினீர்
ஐயா, இயேசு நாதா
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர்
ஐயா, இயேசு நாதா
அடிமை உமக்கே இனி நான்.
3
இன்றைக்கும் நான் செய்யும் இந்த தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிறைப்பும்
நொறுக்கும், உருக்கும் உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஜெம்பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிறைப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
அக்கினி என்னுள்ளம் நிறைப்பும்.
4
வீட்டிலும், ஊரிலும் செல்லுமிடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மேசியா வருகை வரையில் பலரை
சிலுவைக்கருகில் அழைக்க ஏவிடும்
முழங்காலில் நிற்க, வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
என்றுமே வராமல் காத்திடும்.