அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 148

உம் பாதம் பணிந்தேன்

பல்லவி

உம் பாதம் பணிந்தேன் என்றநாளும் துதியே

உம்மையன்றி யாரைப் பாடுவேன் - ஏசைய்யா

உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

1

பரிசுத்தமே பரவசமே

பரனே சருளே வரம்பொருளே

தேடினதால் கண்டடைந்தேன்

பாடி பாடல்கள் ஈந்தளித்தீர்.

— உம் பாதம்

2

புது எண்ணையால் புது பெலத்தால்

புதிய கிருபை புது கவியால்

நிறைப்பி நிதம் நடத்துகின்றீர்

நூதன சாலேமில் சேர்த்திடுவீர்.

— உம் பாதம்

3

என்முன் செல்லும் உம் சமுகம்

எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்

உமது கோலும் உம் தடியும்

உண்மையாய் என்னையும் தேற்றிடுதே.

— உம் பாதம்

4

என் இதய தெய்வமே நீர்

எனது இறைவா! ஆரூயிரே

நேசிக்கிறேன் இயேசுவே உம்

நேசமுகம் என்று கண்டிடுவேன்.

— உம் பாதம்

5

சீருடனே பேருடனே

சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியின்

சீக்கிரமாய் சேர்த்திடுவீர்

சீயோனை வாஞ்சித்து நாடுகின்றேன்.

— உம்பாதம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு