அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 147

இவரே பெருமான்

பல்லவி

இவரே பெருமான் ; மற்றப் பேர்

அல்லவே பூமான், - இவரே பெருமான்.

1

கவலைக் கிடங்கொடுத் தறியார், - வேறு

பலவினை யாதுமே தெரியார், - இப்

புவனமீது நமக்குரியார்.

— இவரே

2

குருபர்களுக் குதவும் விழியாம், - பாவக்

கரும இருளை நீக்கும் ஒளியாம், - தெய்வம்

இருக்கும் தலஞ்செல் வாசல் வழியாம்.

— இவரே

3

பலபிணி தீர்க்கும் பரிகாரி, - சொல்லும்

வல்லமையில் மிக்க விபகாரி, - எக்

குலத்துக்கும் நல்ல உபகாரி.

— இவரே

4

அறஞ் செய்வதனில் ஒரு சித்தன், - கொடு

மறம்விடு பவர்க்கருள் முத்தன், - இங்கே

இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன்.

— இவரே

5

அலைகதனை ஜெயித்த வீரன், - பவ

உலகை ரட்சித்த எழிற்பேரன், - விண்

ணுலகு வாழ் தேவ குமாரன்.

— இவரே

6

பொன்னுலகந் தனில்வாழ் யோகன், - அருள்

துன்ன உலகில் நன்மைத் தேகன், - நம்பால்

தன்னை யளித்த ஓர் தியாகன்.

— இவரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு