அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 146

இயேசுவை நான் நம்பி

இயேசுவை நான் நம்பி ஜீவியம் செய்குவேன்;

இயேசு தான் என் தஞ்சம் வானிலும் பூவிலும்.

1

பூமியின் பாரங்கள் யாதொன்றெனக்கில்லை ;

போக்கிடமாகுவோன் என் இயேசுதானல்லோ!

2

இராப்பகல் அன்பர்தம் கண்மணிபோல் என்னை

காப்பதற்காகவே தூங்கிடேன் என்றார்.

3

சாத்தானும் சேனையும் சண்டை செய்திடினும்

சாவை வென்றுயிர்த்தோனால் ஜெயக்கொடி நாட்டுவேன்.

4

பூலோக மாய்கையில் நான் வீழ்ந்திடாமலே

மேலோக காட்சியென் கண்களில் வீசுதே.

5

பாவம் பெருகுதே லோகம் உயருதே

நீதியின் சூரியன் மங்கி எரியுதே.

6

ஒவ்வொருவரும் தம்தம் காரியம் நோக்கவே

இயேசுவின் காரியமோ யாருமே தேடார்.

7

மார்க்கம் தப்பிச் செல்லும் மானிடரை எல்லாம்

வழிப்படுத்துவதில் எவ்வாணாளைப் போக்குவேன்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு