பல்லவி
இயேசுவின் நாமமே திருநாமம் - முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்.
1
காசினியில் அதனுக்கிணையில்லையே ; - விசு
வாசித்த வர்களுக்குக் குறைவில்லையே.
— இயேசு
2
இத்தரையில் மெத்த வதி சயநாமம் ; - அதை
நித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம்.
— இயேசு
3
உத்தம மகிமை பிரதாப நாமம் ; - இது
சத்திய விதேய மன மொத்த நாமம்.
— இயேசு
4
பட்சமுடன் இரட்சைசெய் முபகாரி; - பெரும்
பாவப் பிணிகள் தவிர்க்கும் பரிகாரி.
— இயேசு