பல்லவி
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்.
1
பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்.
— இயேசு
2
பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
— இயேசு
3
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
— இயேசு
4
நேற்றும் இன்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
— இயேசு
5
முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்
— இயேசு
6
சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாப பிசாசைத் துரத்திடும் நாமம்
— இயேசு