பல்லவி
இயேசு தானே அதீசய தெய்வம்
இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
1
அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரை தெய்வமாய்க் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைத்து இருப்பதே சிலாக்கியம்
— இயேசு
2
இருவர் ஒருமித்தது அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அமுது நீ ஜெயித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார்.
— இயேசு
3
மனிதன் மறுபிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையுமுன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு
— இயேசு
4
ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
பாவிகளை நேசிக்கும் தெய்வம்
ஆவியோடு உண்மையாய் தொழுதால்
தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய்.
— இயேசு