இயேசு என் அஸ்திபாரம், ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல், இயேசுவில் கண்டேன் யானும்.
1
பஞ்சம் பசியுடனே, மிஞ்சும் துயர் வந்தாலும்,
அஞ்சிடேனே இவையை என் தஞ்சம் யேசு இருக்கையில்
2
என்ன மதுரம் அவர்; நன்னய நாமச்சுவை,
என்னகத்தில் நினைந்ததால், இன்னல் பறந்திடுமே.
3
லோகம் என்னை எதிர்த்து, போவென்று சொல்லிடினும்
சோகம் அடைவேனோ என் ஏகன் எனக்கிருக்க.
4
என்னென்ன மாயலோகக் கன்னல் என்மேல் வந்தாலும்,
முன்னும் பின்னுமா யேசு, என்னை நடத்திடுவார்.
5
வியாதியால் என்தனது, காபக் கெட்டுப் போயினும்,
மாயத் தோற்றத்தை யேசு, நாயகன் மாற்றிடுவார்.
6
பாவத்தால் என்னில் வந்த, சாபக் கறைகள் மாற்றி,
சோபித நீதியுடை, ஆபரணமாய் சீவார்.
7
ஆசை என் மணவாட்டி, ஆக்குவேன் உன்னையேனும்,
நேச உறுதியுறை, இயேசு எனக்களித்தார்.