பல்லவி
ஆத்துமமே, என் முழு உள்ளமே, - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து; இந்நாள் வரை
அன்பு வைத்தாரித்த
ஆண்டவரைத் தொழுதேத்து.
1
போற்றிடும் வானோர், பூதலத் துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள.
— ஆத்துமமே
2
தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலக முன்தோன்றி ஒழியாத.
— ஆத்துமமே
3
தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினைபொறுத் தருளும் மேலான
— ஆத்துமமே
4
வாதை நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த
— ஆத்துமமே
5
உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடிசூட்டும்
— ஆத்துமமே
6
துதி மிகுந்தேற ஸ்தோத்தாரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே
— ஆத்துமமே