அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 140

அன்பே! அன்பே! அன்பே!

பல்லவி

அன்பே! அன்பே! அன்பே!

ஆருயிர் உறவே

ஆனந்தம் ஆனந்தமே

1

ஒரு நாளுந் தயை கண்டேனையா

அந்நாளென்னை வெறுத்தேனையா

உன் தயை பெரிதையா - என் மேல்

உன் தயை பெரிதையா.

— அன்பே

2

பரலோகத்தின் அருமைப் பொருளே

நரலோகில் என்மேலையா

ஆழம் அறிவேனா - அன்பின்

ஆழம் அறிவேனா.

— அன்பே

3

அலைந்தேன் பல நாள் உமையுமறியா

மறந்தே திரிந்த துரோகியை

அணைத்தீர் அன்பாலே - எனையும்

அணைத்தீர் அன்பாலே.

— அன்பே

4

பூலோகத்தின் பொருளின் மகிமை

அழியும் புல்லின் பூவைப் போல்

வாடாதே ஜயா - அன்பு

வாடாதே ஜயா.

— அன்பே

5

இப்பாரினில் உம் அன்பின் இனிமை

இயம்பற் கியலாதாகில் யான்

இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்

இசைக்கவும் எளிதாமோ.

— அன்பே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு