பல்லவி
அன்பின் முரசு அகிலத்தில் கேட்கிற முழக்கம்
ஆண்டவர் சிலுவை நேசரால்.
1
சிலுவையில் சீரேசு ஜீவனை விட்டார்
சஞ்சலங்களினின்றுமே விடுவித்தார்
அன்பின் பாத்திரத்தை யேசு அளித்தார்
அறையுண்ட சிலுவை நேசர்தாமே.
— அன்பின்
2
கபோதிக்குக் கண்களைக் கொடுத்தார்
காலில்லாத ஊனர்க்குக் காலை ஈந்தார்
காட்சியைக் கர்த்தர் யேசு காட்டினார்
கடாவப்பட்ட சிலுவை நேசர் தாமே.
— அன்பின்
3
அன்பாகவே அழைக்கிறார் அவனவரையும்
அலையும் அசடர்க்கு வழியையும்
காசினியோர் கண்டு வாசிக்கவும்
கடாட்சித்தார் சிலுவை நேசர்தாமே.
— அன்பின்