அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 14

சீர்மிகு வான்புவி தேவா

1

சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்!

சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்

ஏர்குணனே, தோத்ரம்! அடியார் - கு

இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா!!

2

நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம்!

நித்தமும் உமக் கடியார்களின் தோத்ரம்!

ஆர் மணனே, தோத்ரம்! உனது

அன்பினுக்கே தோத்ரம், மா நேசா!

3

ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்!

தினம், தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்

ஆவலுடன் தோத்ரம்! உனது

அன்பினுக்கே தோத்ரம், மா நேசா!

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு