பல்லவி
காலமே தேவனைத் தேடு; - ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு.
அனுபல்லவி
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு;
சீரான நித்திய ஜீவனை நாடு. -
1
மன்னுயிரை நினைத்தாரே - மனு
மைந்தனானவரை அன்பாய் தந்தாரே
உன் சிருஷ்டிகரை நீ உதயத்திலெண்ணு,
உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு. -
2
பாவ சோதனைகளை வெல்லு; கெட்ட பாருடன் பேயுடன் போருக்கு நில்லு, ஜீவ கிரீடம் சிரசிலணியச் சிந்தனை செய், மனு வேலனைப் பணிய
- காலமே
3
சிறுவர்கள் என்னிடம் சேரத் - தடை செய்யா திருங்களென்றார் மணதார;
பரலோக ராஜ்யமவர் சுதந்திரக்கும் பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்
- காலமே
4
வேலையுமக்கக் கைகூட; - சத்ய வேதன கிருபை வரத்தை மன்றாட,
காலை தேடுவோரென்னைக் கண்டடைவாரே, கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே.
- காலமே