பல்லவி
அன்பிலே பூரணரே - எங்கள்
ஆனந்த ரூபா அதிசய ராஜா.
அனுபல்லவி
அழகில் சிறந்தோனே - எங்கள்
ஆசையின் கோமானே
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அன்னியராம் எமை அழைத்தணைத்தீரே.
— அன்
1
காத்தீரே கருணையுடன் - எம்
கலகங்கள் நீக்கி கனிவுடன் தூக்கி
கதியில்லா ஏழைகளின் - பெரும்
கவலைகளைப் போக்கி
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
ஆறுதல் அளித்தீர், அனுதினம் துதிப்பேன்.
— அன்
2
ஆனந்தம் ஆனந்தமே - உம்
ஆருயிர் சந்தீர் அவனியில் வந்தீர்
அலைகதனை வென்றீர்-அவன்
அடிமைகளை மீட்பர்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம்.
— அன்
3
நித்தியப் பரிசுத்தரே - உம்
வருகையில் அடியாரை பரிசுத்தம் செய்யும்
உத்தம ஜீவிகளாய் - நல்
நித்திய வாழ்வினிலே
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம்.
— அன்
4
தோத்திரம் துதியுமக்கே - தேவா
அன்பின் ஆழம் அறிந்து புகழ்வோம்
ஆயத்த முள்ளோர்க்கே - நீர்
அருணோதயமாவீர்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம்.
— அன்