அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 137

அல்லேலூயா கர்த்தரையே

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்

அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே

துதியுங்கள்

வல்லமையாய் கீரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்

எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் ஏசுவைத் துதியுங்கள்

பல்லவி

ராஜாதி ராஜனாம் ஏசு ராஜன்

பூமியில் ஆட்சி செய்வார்

அல்லேலூயா அல்லேலூயா

தேவனைத் துதியுங்கள்.

1

தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்

இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்

எக்காலமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்

எக்காலமும் மாறாதவர் ஏசுவைத் துதியுங்கள்.

— ராஜாதி

2

சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள்

ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்

அக்கினியே, கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்

அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்.

— ராஜாதி

3

பிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள்

வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்

பெரியவரே பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்

செல்வங்களை ஏசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்.

— ராஜாதி

4

ஆழ்கடலே, சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்

அலையலையாய் ஊழியர்கள் எழும்பினால் துதியுங்கள்

தூதர்களே, முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்

பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்.

— ராஜாதி

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு