அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 136

அடைக்கலமே உமதிடமை நானே

பல்லவி

அடைக்கலமே உமதிடமை நானே

ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே

கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே

நித்தம் நித்தம் நான் நினைப்பேனே.

1

அளவற்ற அன்பினால் அணைப்பவரே

எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே

மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா

பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே.

— ஆ!

2

கர்த்தரே உம் செயல்கள் பிரியவைகளே

சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே

நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே

பக்தரின் பேரின்ப பாக்கியமிதே.

— ஆ!

3

என்னை என்றும் போதித்து நடத்துபவரே

கண்ணனை வைத்து ஆலோசனை சொல்லுபவரே

நடக்கும் வழிதனை காட்டுபவரே

நம்பி வந்தோரை கிருபை சூழ்ந்து கொள்ளுகுதே.

— ஆ!

4

கர்ம பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ

கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ

குழியில் விழாதபடி காத்துக் கொண்டிரே

அழுகையை களிப்பாக மாற்றி விட்டீரே.

— ஆ!

5

பாவங்களை பாராதென்னை பற்றிக் கொண்டிரே

சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே

இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே

உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே.

— ஆ!

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு