பல்லவி
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?
பிரியமே நீ ரூபவதி எழுந்துவா
உன் நேசரை சந்திக்கவே
1
குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சத்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய்காய்க்கும் காலம் வந்ததே
திராட்சை செடி பூப்பூத்து வாசம் பெருகுதே.
— என் பிரியமே
2
மாரிகாலம் சென்றது மழையும் ஒழிந்தது
பூமியிலே புஷ்பங்கள் பூத்து குலுங்குது
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப்பாடு
— என் பிரியமே
3
சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
தாகம் தீர்க்கும் ஜீவநதி கர்த்தர் இயேசு
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு.
— என் பிரியமே