அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 134

வான மீதிலே என் மன்னன்

பல்லவி

வானமீதிலே என் மன்னன் வருவார்

வானமீதிலே என் மன்னன் வருவார்

மகிமையோடு என்னை சேர்த்துக் கொள்ளுவார்

நான் அங்கே போவேன் ஆர்ப்பரிப்பேன்

என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன் - 2

1

நான் நடக்கும் இடமோ தங்க மயமாம்

நான் தங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்

தூதர்கள் போல நானும் இருப்பேன் - என்

தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன்.

— வான

2

துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை

பஞ்சம் இல்லை, அங்கே பசியுமில்லை

தூதர்கள் போல நான் காணம் பாடுவேன் - என்

தூயவனை தரிசித்து தொழுதிடுவேன்.

— வான

3

வியாதியில்லை மன துயரமில்லை

மரணமில்லை அங்கே - அழுகையில்லை

தூதர்கள் போல நான் அங்கே இருப்பேன் - என்

துயர் தீர்த்த இயேசுவை கண்டு மகிழ்வேன்.

— வான

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு