பல்லவி
இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே ஒளி நித்தியம் தேவன் - 2
1
புதுவாழ்வு எனக்குத் தந்தார்
சமாதானம் நிறைவாய் அளித்தார்
பாவங்கள் யாவும் மன்னித்தார்
சாபங்கள் யாவும் தொலைத்தார்
கல்வாரி மீதில் எனக்காய்
தம் உதிரம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார்
உன்னத்தில் அமர்ந்தார்
— இயேசுவே
2
நல்ல மேய்ப்பராக காத்தார்
என்னை தமையனாக கொண்டார்
என் நண்பனாக வந்தார்
என் தலைவனாக நின்றார்
மேகங்கள் மீதில் ஓர்நாள்
மணவாளனாக வருவார்
என்னை அணைத்துக் கொள்வார்
வானில் கொண்டு செல்வார்
— இயேசுவே