பல்லவி
இராஜாதி இராஜன் இயேசு வருவார்
சந்திக்க ஆயத்தமா?
வருவேன் என்றார் சீக்கிரம் வருவார்
சிந்திக்க ஆயத்தமா?
1
கேள் கேள் மானிடரே
சிந்திக்க ஆயத்தமா?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
சந்திக்க ஆயத்தமா?
2
பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
சந்திக்க ஆயத்தமா
பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
சந்திக்க ஆயத்தமா?
3
குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
சந்திக்க ஆயத்தமா?
கத்தி கதறியே தாழிடுவார்
சந்திக்க ஆயத்தமா?
4
உலகமனைத்துமே கண்டிடுமே
சந்திக்க ஆயத்தமா?
பரிசுத்தவான்களின் பேர் நிற்குமே
சந்திக்க ஆயத்தமா?