1
மகத்துவ ராஜன் வருகிறார்
மகத்துவ ராஜன் வருகிறார்
மணவாட்டி சபையே எழுந்திரு (2)
எக்காலம் தொனிக்க மரித்தோர் உயிர்த்தி
தூத சேனையுடன் வருகிறார் (2)
2
சூரியனே சந்திரனே வான மண்டலமே
அக்கினியே பெருங்காற்றே கடலின் ஆழமே (2)
வானங்கள் அகல பூதங்கள் உருக
வல்லவர் இயேசு வருகிறார் (2)
3
ராஜாக்களே பிரபுக்களே பூமியில் உள்ளோரே
வாலிபரே கன்னியரே வயதில் முதியோரே (2)
நீதியின் செங்கோல் கைகளிலேந்தி
நியாயாதிபதியாய் வருகிறார் (2)
4
நித்தியராம் சத்தியராம் வார்த்தையானவரின்
வருகையை எதிர்நோக்கும் அட்வென்ட் சபையோரே (2)
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
ஒசன்னா கீதம் பாடுவோம் (2)