அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 130

சாலேமின் ராஜா, சங்கையின் ராஜா

1

சாலேமின் ராஜா, சங்கையின் ராஜா

சுவாமி வாருமேன் - இந்தத்

தாரணி மீதினில் ஆளுகை செய்திடச் சுதீ வாருமேன்

— சாலே

2

சீக்கிரம் வருவே னென்றுரைத்துப்போன

செல்வக்குமாரனே - இந்தச்

சீயோனின் மாதுகள் தேடத்திரிகின்ற செய்தி கேளீரோ

— சாலே

3

எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்து

கண்பூத்துப் போகுதே ; நீர்

சுட்டிக்காட்டிப் போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே

— சாலே

4

நங்கை எருசலேம் பட்டினம் உம்மை

நாடத்தேடுதே - இந்த

நானிலத்திலுள்ள ஜீவப் பிராணிகள் தேடிவாடுதே

— சாலே

5

சாட்சியாக சுபவிசேஷம்

தாரணி மேவுதே - உந்தன்

சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கவுவதே

— சாலே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு