பல்லவி
வானில் எக்காளம் முழங்கிடவே
வாஞ்சையோடு பறந்திடுவோம்
இப்புவித் துன்பங்கள் மறந்திடவே
இயேசுவின் ராஜ்ஜியம் நெருங்கிடவே.- (2)
ஆ... ஆமென் அல்லேலூயா
ஆமென் வாரும் இயேசுவே. (2)
1
கன்மலை வெடிப்பினில் உத்தமியாய்
கறைகள் தீரைகள் அகற்றிடுவோம்
கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே
அவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம்.
ஆ...ஆமென்
2
மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த
மகிபன் உரைத்த வாக்கின்படி
மாசற்ற மணவாட்டி சபையதனை
மகிமையில் சேர்க்கவே வந்திடுவார்.
— ஆ...ஆமென்
3
பாரினில் பலியாய் ஜீவன் வைத்தோர்
பாடுகள் பாதையில் ஏற்றதினால்
தியாகத்தின் மேன்மையை காத்துக் கொண்டோர்
அவர்போல் மாறியே பறந்திடுவார்.
— ஆ...ஆமெ
4
மகிமையின் நாளும் நெருங்கிடுதே
மணவாளன் சத்தமும் கேட்டிடுதே
மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க
ஆயத்தம் தீவிரம் அடைந்திடுவோம்.
— ஆ...ஆமெ