அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 12

கர்த்தாவே என் பெலனே

பல்லவி

கர்த்தாவே என் பெலனே

உம்மில் அன்பு கூறுவேனே

உத்தமானதும் வழிதானே.

1

என் கன்மலையும் என் கோட்டையும் என் ரட்சகரும் என் தேவனும் என் கேடகமும் ரட்சணியக் கொம்பும் என் உயர்ந்த அடைக்கலமானவர்.

— கர்த்தாவே

2

தயவுள்ளவனுக்குத் தயவுள்ளவரே;

உத்தமனுக்கு நீர் உத்தமரே;

புனிதனுக்கு நீர் புனிதரானவரே

மாறுபவனுக்கு மாறுகிறவரே.

— கர்த்தாவே

3

சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்

மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்

இருளை நீர் வெளிச்சமாக்குவீர்.

— கர்த்தாவே

4

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்

உம்மாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்,

சத்துருவை நான் தொடர்ந்து பிடிப்பேன்.

நிர்மூலமாகும் வரைக்கும் திரும்புவேன்.

— கர்த்தாவே

5

கர்த்தர் ஜீவ தேவனானவர்

என்னுடைய கண்மலையுமானவர்

என்றென்றும் துதிக்கப்படுவாராக

எல்லாவற்றிலும் உயர்ந்திருப்பாராக.

— கர்த்தாவே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு