அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 128

விண்ணமே மீதில் இயேசு ராஜன்

பல்லவி

விண்ணமே மீதில் இயேசு ராஜன்

என் கண்ணில் தோன்றுவார்

அல்லேலூயா... அல்லேலூயா... அல்லேலூயா

1

ஆகாயம் பூமியும்

ஒழிந்தே போய்விடும்

மாறாது நிலைப்பது

வேத வெளிச்சமே.

— விண்ணமே

2

சூரிய சந்திரனும்

ஒளி மங்கியே போய்விடும்

மாறாது நிலைப்பது

ஜீவ வெளிச்சமே.

— விண்ணமே

3

நட்சத்திர கூட்டங்களும்

அத்தி பூப்போல உதிர்ந்திடும்

மாறாது நிலைப்பது

தேவ ராஜ்ஜியமே.

— விண்ணமே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு