அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 127

மோட்ச வீட்டை நான் என்று சேர்வேன

பல்லவி

மோட்ச வீட்டை நான் என்று சேர்வேன்

தூய தூய தேவா.

அனுபல்லவி

அல்லேலூயா தொனி கேட்குதே

அங்கே சென்று நானும் பாடுவேன்.

1

பொற்றற வீதியில் உலாவுவேன்

பொன் மாளிகையில் நான் தங்கிடுவேன்.

முள் முடி சூடிய இயேசுவை

பொன் முடிசூட்டி நான் போற்றிடுவேன்.

— அல்லேலூயா

2

கண்ணீர்கள் யாவும் கர்த்தர் தாமே

கனிவுடன் கரத்தால் துடைப்பாரே

நல்ல போராட்டம் என் ஒட்டமும்

நலமுடன் ஓடி முடித்திடுவேன்.

— அல்லேலூயா

3

புதிய எருசலேம் வாசல்கள்

பூரிப்புடன் என்னை அழைக்குதே

எண்ணிலா பக்தர்கள் தூதர்கள்

என்னரும இயேசுவையும் காணுவேன்.

— அல்லேலூயா

4

கல்லறை தோட்டம் அங்கே இல்லை

குறுகின ஆயுசுளோர் அங்கில்லை

சாவு பவனி அங்கே இல்லை

சஞ்சலம் பஞ்சமும் அங்கே இல்லை.

— அல்லேலூயா

5

புவி யாத்திரை முடியும்போது

பரதீசில் சென்றிறைப்பாறுவேன்

எக்காலம் தொனிக்கும் நேரத்தில்

எழும்பி என் பங்கை நான் பெற்றிடுவேன்.

— அல்லேலூயா

6

ஜீவ புஸ்தகம் திறந்திடும்

ஜீவ தேவன் என்னைக் கூப்பிடுவார்

ஜீவனுக்குள் பிரவேசித்து

ஜீவனுள்ளோர் தேசத்தில் நடப்பேன்.

— அல்லேலூயா

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு