மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்.
பல்லவி
வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புண்ணனகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்.
1
நாற்றிசையினின்று கூடிவாரர்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்.
— வானத்தில்
2
கண்ணீரும் துன்பமும் கடந்து போகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்து விடும்
கர்த்தரின் வருகை நாளின் போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்.
— வானத்தில்
3
திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்
காலையோ, மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்.
— வானத்தில்