பல்லவி
பரம எருசலேமே
பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய்
அழகாக ஜொலித்திடுதே
ஆமென், அல்லேலூயா.
1
எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப் பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன்.
2
ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலை சீருக்கும் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புகைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன்.
3
விடுதலையே, விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
நாதர் எனில் வாழ்வதால் விடுதலையே.
4
கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை.