அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 123

சிங்கார மாளிகையில்

பல்லவி

சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்

சீயோன் மணவாளனுடன்.

1

ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து

ஆறுதலடைந்திடுவோம் – அங்கே

அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி

அன்பரில் மகிழ்ந்திடுவோம்.

2

துயரப்பட்டவர் துதித்துப் பாடுவார்

துதியின் உடையுடனே – அங்கே

உயரமாம் சீயோன் உன்னதரோடு

களித்து கவி பாடுவோம்.

3

முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்

திருமுகம் கண்டிடுவோம் – அங்கே

முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி

தரித்தோராய் துதித்திடுவோம்.

4

பூமியின் அரசை புதுப் பாட்டாய் பாடி

புன்னகை பூத்திடுவோம் – புது

எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்

மண்ணாசை ஒழித்திடுவோம்.

5

அவருரைத்த அடையாளங்களெல்லாம்

தவறாமல் நடக்கிறதே – அவர்

வரும்வேளை அறியாதிருப்பதால் எப்போதும்

ஆயத்தமாயிருப்போம்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு