அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 122

எக்காள தொனியோடே

பல்லவி

எக்காள தொனியோடே மானிடரே வாரீர்

எக்காலம் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்

அல்லேலூயா அல்லேலூயா.

1

என் இயேசு பொன்னேசு என்னை மாற்றியவரும் அவரே

அன்போடும் பண்போடும் என்னை நடத்துபவரும் அவரே.

2

சந்தோஷம் சந்தோஷம் என்னை ஆவியிலே நிறைத்தீர்

சங்கீதம் பாடுவேன் நான் அவருடன் சேர்ந்திடுவேன்.

3

கல்வாரி நாயகனாம் இயேசு மீண்டும் வந்திடுவார்

கைதட்டி பாடுவேன் நான் அவருடன் சேர்ந்திடுவேன்.

4

பிசாசு வரும்போது நான் அவரையே கூப்பிடுவேன்

பிசாசை ஜெயித்தவராம் அவர் எனக்கும் ஜெயம் தருவார்.

5

அன்பான மானிடரே நீங்கள் அனைவரும் வாருங்கள்

அன்பான இரட்சகராம் நம்மை அழைக்கிறார் வாருங்கள்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு