அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 121

ஆனந்த துதி ஒலி கேட்கும்

பல்லவி

ஆனந்த துதி ஒலி கேட்கும்

ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்

ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்

ஆண்டவர் வாக்கு பலிக்கும்.

1

மகிமைப்படுத்துவேன் என்றாரே

மகிபனின் பாசம் பெரிதே

மங்காத புகழுடன் வாழ்வோம்

மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே

குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்

கரையில்லா தேவனின் வாக்கு.

2

ஆதி நிலை ஏகுவோமே

ஆசீர் திரும்பப் பெறுவோமே

பாழான மண்மேடுகள் யாவும்

பாராளும் வேந்தன் மனையாகும்

சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்

சீயோனின் மகிமை திரும்பும்.

3

விடுதலை முழங்கிடுவோமே

விக்கினம் யாவும் அகலும்

இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை

இரட்சகர் மீட்பருள்வாரே

நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்

விடுதலைப் பெருவிழா காண்போம்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு