பல்லவி
அதிசயமான ஒளிமய நாடாம்
என் இயேசுவின் நாடாம்
நான் வாஞ்சிக்கும் நாடாம்.
1
பாவம் இல்லாத நாடு – ஒரு
சாபமும் காணா நாடு (2)
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா.
2
சந்திர சூரியன் இல்லை – ஆனால்
இருள் ஏதும் காணவில்லை (2)
தேவகுமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல்.
3
விதவித கொள்கை இல்லை – பல
பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் – அன்புள்ளோர் செல்லும்.
4
பிரச்சனை ஏதும் இல்லை – வீண்
குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி நிறம் ஜாதிப்பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி.