அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 119

மேக மீதில் தூதரோடும்

பல்லவி

மேகமீதில் தூதரோடிதோ, இதோ!

மேசியா கிறிஸ்தேசையா வெனதாச நேசையா

வாரார் வாரார் மகிழ்கெம்பீரமாய்.

1

மேகத்தோடு போனவர் இவர், இவர்!

திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட

சீக்கிரம், சீக்கிரம், ஜெகத்தை நோக்கியே.

2

ஒலிவமலை விட்டேகினார், அப்போ, அப்போ!

உருவத்தோடங்கு திரும்புவாரதை உற்று நோக்குவோம்

ஓடிப்பாடி உவந்து போற்றுவோம்.

3

ஆரவாரம் கேட்குதே அதோ, அதோ!

ஆட்டுக்குட்டியின் பாட்டோடு எக்காளம் அதிர்ந்து தொனிக்குதே

அல்லேலூயா அருமை ரட்சகா.

4

மனுவேல் ராஜன் வருகிறார், அதோ, அதோ!

மலை நடுங்கிட புவி அதிர்ந்திடக் கடல் கலங்கிட

வானோர் பூவோர் வணங்கி நிற்கவே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு