அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 11

கர்த்தர் பெரியவர்

பல்லவி

கர்த்தர் பெரியவர் அவர் நமது

தேவனுடைய நகரத்திலும்,

தமது பரிசுத்த பர்வதத்திலும்

மிகத் துதிக்கப்படத் தக்கவர்.

1

வட திசையிலுள்ள சீயோன் பர்வதம் படிப்பமான ஸ்தானமும் சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது. அது மகாராஜாவின் நகரம்.

— கர்த்தர்

2

அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாய் அறியப்பட்டுள்ளார். இதோ ராஜாக்கள் கூடிக்கொண்டு ஏகமாய் கடந்து கொண்டு வந்தார்கள்.

— கர்த்தர்

3

அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள். பிரசவ வேதனைப்படும் ஸ்திரீயைப்போல நடுங்கி வேதனைப்பட்டார்கள்.

— கர்த்தர்

4

கீழ்க் காற்றினால் தார்ஷீஷினுடைய கப்பல்களை நீர் உடைக்கிறீர். சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்.

— கர்த்தர்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு