பல்லவி
மேகமீதில் ஏசு ராஜன்
வேகம் வாராரே.
அனுபல்லவி
ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்க
அவரே வாராரே.
1
ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
அவனியில் வாராரே
மீண்டவரோ மேலோகமே செல்ல
மேதினியை விடுவார்.
2
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம்
கிளம்பியே எழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
மறைந்தே போவாரே.
3
பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே
பாடுபட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே
கூடவே கொடுத்திடுவார்.
4
அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே
அவர்வரும் வேளையை எவருமறியார்
ஆண்டவரே அறிவார்.
5
ஆயிரவருஷ ஆளுகை செய்வார்
ஆண்டவர் ஏசுதாமே
நீதி சமாதானம் நிறைந்தேயிருக்கும்
ஜோதியின் ஆளுகையில்.
6
அல்லேலூயா கீதமே பாடி
அகமகிழ்ந்து ஆடிடுவோம்
வல்லவர் வரும் வேளையுமிதோ
மெல்லவே நெருங்கிற்றே.