பல்லவி
மகிமையுள்ள மாயேசுராஜன் வானதூத சேனைகளோடு
சீக்கிரம் வாரார் ஆனந்தமாமே.
1
பூமியும் அதிசயிக்க வானோர்கள் ஆர்ப்பரிக்க
தூதரொளியுடன் மேகமதில் வாரார் (2)
ஏழை நாங்கள் இயேசுவைச் சந்திப்போம்
ஆனந்தமாமே.
2
எக்காளந்தான் தொனிக்க வாஞ்சைகள் யாவும் தீர
நண்பரின் பக்கத்தில் யாவரும் கூடியே (2)
ஆனந்தம்பாடி நாம் இயேசுவைப் போற்றிட
ஆனந்தமாமே.
3
பூமியின் ஜாதிகளும் தேசத்தின் ராஜாக்களும்
மனுவேல் ராஜனால் நியாயம் விதிபெற (2)
அன்பார்ந்த நாங்கள் இயேசுவுடன் நிற்கும்
ஆனந்தமாமே.
4
ஆயிரம் ஆண்டுகளும் பூமியின் ஆட்சிகளும்
முற்றுமாய்த் தீர்ந்தபின் அன்பருடன் நாங்கள்
நித்தியம் ஜீவித்து ஆளுகை செய்திடும்
ஆனந்தமாமே.