பல்லவி
பிரதான தூதன் எக்காளம் முழங்க
பரமன் இயேசு வருவார் (2).
அனுபல்லவி
சாயுங்காலத்திலோ, நடுராவினிலோ
சேவல் கூவிடும் நேரத்திலோ
அதிகாலையிலோ எந்த வேளையிலோ
பரமன் இயேசு வருவார்.
1
இருவர் வயலில் இருப்பார்
இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைப்பார்
ஒருவர் கைவிடப்படுவார்
ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர்.
2
நோவா காலத்தின் சம்பவம் போல்
நடந்திடும் அந்த நாட்களிலே
புசித்தும் குடித்தும் பெண் கொண்டும்
பலர் அசந்து வெறித்திருப்பார்.
3
லௌகீகக் கவலைகளினாலும்
இச்சை மிகுந்த வெறியினாலும்
எம் இதயம் பாரம் அடையாமல்
எச்சரிக்கையுடன் காத்திருப்போம்.
4
இரவும் பகலும் விழிப்பாய்
இருதயம் நொறுங்கி ஜெபிப்போம்
கற்புள்ள கன்னிகையாக நாமும்
கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம்.
5
தவிக்கும் உலகம் அந்நாளில்
தலைகளை உயர்த்தி நடப்போம்
வருகை நெருங்க கர்த்தர் இயேசு
வாசற்படியில் வந்து நிற்கிறார்.