அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 115

பாவத்தின் பலன் நரகம்

1

பாவத்தின் பலன் நரகம் – ஓ பாவி நடுங்கிடாயோ

கண் காண்பதெல்லாம் அழியும் – காணாததல்லோ நித்தியம்.

பல்லவி

இயேசு ராஜா வருவார்

இன்னுங் கொஞ்சங் காலந்தான்

மோட்சலோகம் சேர்ந்திடுவோம்.

2

உலக இன்பம் நம்பாதே, அதின் இச்சை யாவும் ஒழியும்

உன் ஜீவன் போகும் நாளிலே, ஓர் காசும் கூட வராதே.

3

உன் காலமெல்லாம் போகுதே, உலக மாய்கையிலே

ஓ தேவகோபம் வருமுன், உன் மீட்பரண்டை வாராயே.

4

தேவன்பின் வெள்ளம் ஓடுதே, கல்வாரி மலை தனிலே

உன் பாவம் யாவும் நீங்கிப்போம், அதில் ஸ்நானம் செய்வதாலே.

5

மாபாவியான என்னையும், என் நேசர் ஏற்றுக்கொண்டாரே

ஓ பாவி நீயும் ஓடிவா, தேவாசீர்வாதம் பெறுவாய்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு