பல்லவி
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ.
1
வருத்தம் பசிதாகம்
மனதுயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்ணவர் பாதம் சேர்வேன்.
2
சிலுவையில் அறையுண்டேன்
இனி நானல்ல இயேசுவே
அவரின் மகிமையே
எனது இலட்சியமே.
3
இயேசு என் நம்பிக்கையாம்
இந்தப் பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன்
இயேசுவைப் பின்பற்றுவேன்.
4
ஓட்டத்தை ஜெயமுடன்
நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில்
சோராது ஓடுவேன்.
5
பரம சுகம் காண்பேன்
பரன் தேசம் அதில் சேர்வேன்
இராபகல் இல்லையே
இரட்சகர் வெளிச்சமே.