அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 113

நான் ஆயத்தமானேன்

பல்லவி

நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க

நித்திய மகிழ்ச்சி அடைவேன்

மத்திய ஆகாய மீதிலே

மன்னன் இயேசுவைக் காணுவேன்.

1

மணவாளன் தட்டும்போது ஆயத்தமே

மங்கிடாதே என் விளக்குகளே

ஜீவசுடர் ஒளியாய் ஜொலிப்பேன்

தேவப் பிதா தங்கும் மாளிகையில்.

2

சுபதின வெண் வஸ்திரம் ஆயத்தமே

சீருடனே நான் தரித்திடுவேன்

ஆட்டுக்குட்டியானவர் விருந்தில்

அன்பரோடே நானும் வீற்றிருப்பேன்.

3

சுவிசேஷ பாதரட்சை ஆயத்தமே

சேவையிலே நான் அணிந்திடுவேன்

இயேசுவின் நாள் வேகம் நெருங்கிடுதே

இந்த நற்செய்தியைச் சாற்றிடுவேன்.

4

பாடுபட்டு மரிக்கவும் ஆயத்தமே

பாரினிலே என் இயேசுவுக்காய்

பற்பல துன்பங்கள் சகித்திடுவேன்

பேரின்ப ராஜ்ஜியம் சேர்ந்திடுவேன்.

5

எக்காளங்கள் தொனித்திட ஆயத்தமே

என் அரும் இயேசு வருகிறாரே

ஆமென் என் இயேசுவே வாரும் என்றே

ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன்.

6

பரலோகம் செல்ல நானும் ஆயத்தமே

பொன் நகரம் நான் சுதந்தரிப்பேன்

அல்லேலூயா பாடிப் பறந்திடுவேன்

ஆண்டவர் அழைத்திடும் நாளதிலே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு